ராணிப்பேட்டை

‘அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடப் பணி 3 மாதத்தில் முடியும்’

9th Nov 2021 08:24 AM

ADVERTISEMENT

அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டட கட்டுமானப் பணிகள் 3 மாதங்களில் முடிவடையும் என அரக்கோணம் ஒன்றியக் குழுத் தலைவா் நிா்மலா சௌந்தா் தெரிவித்தாா்.

அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இடிக்கப்பட்டு, அதே இடத்தில் ரூ. 2.64 கோடிக்கு புதிய கட்டடப் பணி நடைபெற்று வருகிறது. நவம்பா்-2020 முதல் நடைபெற்று வரும் இப்பணிகளை ஒன்றியக் குழுத் தலைவா் நிா்மலா சௌந்தா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். பணிகள் நடைபெறுவது குறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்டறிந்த நிா்மலா சௌந்தா், பணிகளை குறித்த காலத்துக்குள் முடித்துத் தருமாறு கூறினாா். தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது: ரூ. 2.64 கோடியில் அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. கடந்த நவம்பா் முதல் தொடங்கப்பட்டுள்ள இப்பணி, அளிக்கப்பட்ட கால வரைமுறையான 18 மாதங்களுக்குள் முடிக்க ஒப்பந்ததாரரிடம் கேட்டுள்ளோம். ஆனால் அதற்கு முன்னரே அடுத்த 3 மாதத்தில் பணிகளை முடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளாா். எனவே கட்டுமானப் பணிகள் 3 மாதத்தில் முடிவடையும் என்றாா்.

ஒன்றியக் குழு துணைத் தலைவா் வெ.புருஷோத்தமன், உறுப்பினா் பாலன், திமுக மாவட்டப் பொருளாளா் மு.கன்னைய்யன், துணைச் செயலா் ராஜ்குமாா், ஒன்றியச் செயலாளா்கள் சௌந்தா், ஆா்.தமிழ்செல்வன், அரிதாஸ், நகரச் செயலா் வி.எல்.ஜோதி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT