ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வருகை

1st Nov 2021 09:22 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு ஒன்றரை வருடங்களுக்கு பிறகு நவம்பர் 1 முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் காலை முதலே பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மாணவ மாணவிகள் பள்ளிக்கு உற்சாகமாக வருகை தந்தனர். இந்த நிலையில் ராணிப்பேட்டை எல். எப். சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வருகை தந்த மாணவிகளுக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் ஆகியோர் மாணவிகள் அனைவருக்கும் பன்னீர் தெளித்து சந்தனம்,  பூங்கொத்து மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். 

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ் வினோத், நகர பொறுப்பாளர் பூங்காவனம், துணை செயலாளர்கள் ஏ. ஆர். எஸ். சங்கர், ஏர்டெல் குமார், நகர கூட்டுறவு வங்கி நிர்வாகி கிருஷ்ணன் மற்றும் எல்ஐசி பெண்கள் மேல்நிலைப்பள்ளி நிர்வாகி அருட்சகோதரி கிளாரா பள்ளி தலைமை ஆசிரியை அருட்சகோதரி புஸ்பராணி, ஆசிரியைகள் வரவேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT