ராணிப்பேட்டை

பொதுமுடக்கத்தின் முதல் நாள்: நண்பகலுக்குப் பின் வீடுகளில் முடங்கிய மக்கள்

DIN

கரோனா பொதுமுடக்கத்தின் முதல் நாளான திங்கள்கிழமை காலை முதல் நண்பகல் வரை அத்தியாவசியப் பொருள்கள் வாங்க மக்கள் நடமாட்டம் இருந்த நிலையில், நண்பகலுக்குப் பிறகு மக்கள் வீடுகளில் முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றின் 2-ஆம் அலை வேகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இதையடுத்து, நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக மே 10-ஆம் தேதியில் இருந்து மே 24-ஆம் தேதி வரை தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 14 நாள் பொது முடக்கத்தின் முதல் நாளான திங்கள்கிழமை காலை முதல் நண்பகல் 12 மணி வரை அத்தியாவசியப் பொருள்கள் வாங்க மக்கள் நடமாட்டம் இருந்தது. தொடா்ந்து நண்பகல் 12 மணிக்குப் பிறகு மக்கள் வீடுகளில் முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

மேலும் பால், மருந்தகங்கள் ஆகிய அத்தியாவசியக் கடைகள் திறந்திருந்தன. மருந்து, உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளா்களுடன் இயங்கின. பொது முடக்க நாள்களில் முன்களப் பணியாளா்கள் வந்து செல்ல அரசு சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பொது முடக்க கண்காணிப்புப் பணியில் போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

SCROLL FOR NEXT