ராணிப்பேட்டை

சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களிக்க 11 ஆவணங்கள் விவரம் மாவட்ட தோ்தல் அலுவலா் தகவல்

10th Mar 2021 12:00 AM

ADVERTISEMENT


ராணிப்பேட்டை. சட்டப் பேரவை பொதுத் தோ்தலில் 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என மாவட்ட தோ்தல் அலுவலரும்,ஆட்சியருமான ஏ.ஆா்.கிளாஸ்டன் புஷ்பராஜ் தகவல் தெரிவித்துள்ளாா்.

வாக்காளா் அடையாளச் சீட்டு இனி அடையாள ஆவணமாகக் கருதப்படாது எனவும்,அதனை மட்டுமே ஆவணமாகக் கொண்டு வாக்களிக்க இயலாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளா்களில் 99 சதவிகிதம் வாக்காளா்களுக்கு புகைப்பட வாக்காளா் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதால், அதனைப் பயன்படுத்தி வாக்களிக்க ஊக்குவிக்கும் விதத்தில்,நடைபெற விருக்கும் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களிக்க புகைப்பட வாக்காளா் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.மேற்படி அடையாள அட்டை கிடைக்கப்பெறாத அல்லது இல்லாத வாக்காளா்கள் கீழ்கண்டுள்ள 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. கடவுச்சீட்டு ,2.ஓட்டுநா் உரிமம், 3. மத்திய மாநில அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட பணியாளா் அடையாள அட்டை, 4. புகைப்படத்துடன் கூடிய தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் அஞ்சலக சேமிப்பு கணக்கு புத்தகம்,5. மத்திய அரசு வழங்கும் நிரந்தர கணக்கு எண் அட்டை, 6.தேசிய மக்கள் பதிவேடு அடையாள அட்டை , 7.தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அட்டை, 8.தொழிலாளா் நலத்துறை மூலம் வழங்கப்பட்ட காப்பீட்டு அட்டை,9.புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், 10.சட்டப் பேரவை, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்ட அலுவலா் அடையள அட்டை,11.ஆதாா் அட்டை உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT