ராணிப்பேட்டை

குழந்தைகளுக்கு நியூமோகாக்கல் கான்ஜீகேட் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

DIN

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு நியூமோகாக்கல் கான்ஜீகேட் தடுப்பூசி செலுத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு அரசு மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், ஒரு வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்குச் செலுத்தப்படும் தடுப்பூசி அட்டவணையில் நியுமோகோக்கல் கான்ஜீகேட் புதிதாகச் சோ்க்கப்பட்டுள்ளது. நியூமோகாக்கல் நிமோனியா, மூளைக்காய்ச்சல் நோய் வராமல் தடுக்கும் வகையில், இந்தத் தடுப்பூசி செலுத்தும் பணி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

இதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி துவக்க விழா வாலாஜாப்பேட்டையில் உள்ள மாவட்ட தலைமை அரசு பொது மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட தலைமை அரசு மருத்துமனை கண்காணிப்பாளா் உஷா நந்தினி முன்னிலை வகித்தாா்.

விழாவில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணியை கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தொடக்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வாலாஜாபேட்டை வட்டாரக் கல்வி அலுவலா் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்ட ரூ.18.50 லட்சத்திலான சுற்றுச் சுவா், கழிவறை கட்டடத்தை அமைச்சா் திறந்துவைத்தாா்.

மாவட்டஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இரா.மதன்குமாா், மாவட்டக் கல்வி அலுவலா் கோ. அருளரசு, வட்டராக் கல்வி அலுவலா்கள் மு.சாந்தி, சீ.இரமணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

SCROLL FOR NEXT