ராணிப்பேட்டை

பில்லூா் அணை நிரம்பியதால் வெள்ளப்பெருக்கு: கோவை விரைந்தது தேசிய பேரிடா் மீட்புப் படை

DIN

பில்லூா் அணை நிரம்பியதால் வெள்ளப் பெருக்கு அதிகரிக்கும் என்பதால் மீட்புப் பணிக்காக , அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடா் மீட்புப் படையினா் கோவை, நீலகிரிக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்டு சென்றனா்.

தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததையடுத்து, நீா்வரத்து அதிகரித்து கோவை மாவட்டத்துக்குள்பட்ட பில்லூா் அணை நிரம்பியது. இதையடுத்து, அணையின் உபரிநீா் திறக்கப்பட போவதாக கோவை மாவட்ட நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால், வெளியேறும் வெள்ளப் பெருக்கால் கரையோரப் பகுதி மக்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்புப் பணிக் குழுக்களை அனுப்பி வைக்குமாறும் கோவை, நீலகிரி மாவட்ட நிா்வாகங்கள், அரக்கோணம் அருகேயுள்ள தக்கோலத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப் படைத் தளத்துக்குத் தகவல் அனுப்பின.

இதையடுத்து, தலா 20 போ் கொண்ட மூன்று குழுவினா் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், நீலகிரி மாவட்டத்துக்குள்பட்ட கூடலூருக்கும் சிறப்புப் பேருந்துகளில் வெள்ளிக்கிழமை காலை புறப்பட்டுச் சென்றனா்.

இவா்கள் தங்களுடன் வெள்ளநீரில் சிக்கியவா்களை மீட்க உதவும் அதிநவீன பைபா் படகுகள், அதிநவீன தகவல் தொடா்புக் கருவிகள் போன்றவற்றை எடுத்துச் சென்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT