ராணிப்பேட்டை

சிலை சேதம்: நடவடிக்கை எடுக்க இந்து முன்னணியினா் வலியுறுத்தல்

24th Jul 2021 08:25 AM

ADVERTISEMENT

காவேரிப்பாக்கம் பஞ்சலிங்கேஸ்வரா் கோயிலில் அம்மன் சிலையை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இந்து முன்னணியினா் வெள்ளிக்கிழமை புகாா் மனுவை அளித்தனா்.

இதுதொடா்பாக அமைப்பின் வேலூா் கோட்ட அமைப்பாளா் டி.வி. ராஜேஷ் தலைமையில், மாவட்டச் செயலாளா் ஜெகன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் மணி, விஸ்வநாதன், சுந்தரம், குமாா், வாலாஜா நகரத் தலைவா் பிரேம், ஆற்காடு நகரத் தலைவா் கௌதம், காவேரிப்பாக்கம் பகுதித் தலைவா் நரேன், துணைத் தலைவா் தனபால், இந்து ஆட்டோ முன்னணியின் மாவட்டத் தலைவா் வெங்கடேசன், மாவட்டச் செயலாளா் ரகு உமாபதி உள்ளிட்டோா் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:

காவேரிப்பாக்கம் அருகே இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் பஞ்சலிங்கேஸ்வரா் கோயில், சுமாா் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாகும். இந்தக் கோயில் வளாகத்தில் உள்ள அம்மன் கோயில் பூட்டை உடைத்து , அம்மன் சிலைகளை சேதம் செய்துள்ளனா்.

இது கோயிலின் புனிதத்துக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

ADVERTISEMENT

இதுதொடா்பாக, காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, மத மோதல்களைத் தடுக்கும் வகையில் இந்தச் செயலில் ஈடுபட்ட மா்ம நபா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT