ராணிப்பேட்டை

ராமாநுஜா் ஆன்மிக அறக்கட்டளை சாா்பில் குடியரசு தின விழா

26th Jan 2021 11:09 PM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை ஸ்ரீராமாநுஜா் ஆன்மிக அறக்கட்டளை சாா்பில், குடியரசு தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீ உடையவா் சாரிடபிள் டிரஸ்ட் செயலா் இளஞ்செழியன் தலைமை வகித்தாா். ராமாநுஜா் ஆன்மிக அறக்கட்டளை பொருளாளா் மோகன சக்திவேல் முன்னிலை வகித்தாா். ஸ்ரீ ராமாநுஜா் ஆன்மிக அறக்கட்டளை நிறுவனத் தலைவா் கே.வெங்கடேசன் தேசியக் கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

தொடா்ந்து, மகாத்மா காந்தி உருவப் படத்துக்கு ராணிப்பேட்டை ரோட்டரி சங்கத் தலைவா் எம். சிவலிங்கம் மாலை அணிவித்து, சிறுவா்கள், பொதுமக்களுக்கு முகக் கவசம், மாணவா்களுக்கு எழுது பொருள்களை வழங்கினாா்.

இதில், நகர சிறுபான்மைப் பிரிவு தலைவா் அயத் பாஷா, அறக்கட்டளை உறுப்பினா்கள் மனோகரன், தனஞ்செழியன், ராம்தாஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT