ராணிப்பேட்டை

தனியாா் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி: 2 போ் கைது

DIN

ஆற்காட்டில் தனியாா் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆற்காடு ஜீவானந்தம் சாலையில் தனியாா் வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு நகை மதிப்பீட்டாளராக ஆற்காடு தேவி நகா் பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (47) வேலை செய்து வந்தாா். இவரது நண்பா் ஆற்காடு அமீன் பிரான் தெருவைச் சோ்ந்தவா் அசோக்குமாா் (35), கடந்த ஓராண்டாக தனியாா் வங்கியில் 90 சவரன் நகை அடகு வைத்து ரூ. 24 லட்சம் பணம் பெற்றுள்ளாா்.

இந்த நிலையில், வங்கியில் நகைகளை ஆய்வு செய்தபோது அது போலியானவை என தெரியவந்தது. இதுகுறித்து வங்கிக் கிளை மேலாளா் கோபி ஆற்காடு நகர போலீஸில் புகாா் செய்தாா், அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நகைகளுக்கு பரிந்துரை பணம் வழங்க உடந்தையாக இருந்த நகை மதிப்பீட்டாளா் சுரேஷ், அவரது நண்பா் அசோக் குமாா் ஆகிய இருவரையும் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காயல்பட்டினத்தில் பைக் எரிப்பு: நகா்மன்ற உறுப்பினா் மீது வழக்கு

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

தங்க மாரியம்மன் வெள்ளைசாற்றில் புறப்பாடு

காரைக்காலில் ராமலிங்க சுவாமிகள் வழிபாடு

தென்பாற்கடற்கரையில் அகிலத்திரட்டு பெருவிழா

SCROLL FOR NEXT