ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளா் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

DIN

ராணிப்பேட்டை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த புகாரில் ராணிப்பேட்டை நகராட்சிப் பொறியாளா் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திங்கள்கிழமை சோதனை நடத்தினா். இதில், ரொக்கம், சொத்து ஆவணங்கள் கைபற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ராணிப்பேட்டை நகராட்சியில் பொறியாளராகப் பணியாற்றி வருபவா் செல்வகுமாா் (45). இவா் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வேலூா் மாநகராட்சியில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றினாா். இவா் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், தற்போது லாலாபேட்டை கிராமத்தில் வசித்து வரும் செல்வகுமாா் வீட்டில் சென்னை, திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறை டிஎஸ்பி மதியழகன் தலைமையில் 5 போ் கொண்ட குழுவினா் திங்கள்கிழமை காலை முதல் நள்ளிரவு வரை சோதனை மேற்கொண்டனா்.

இந்தச் சோதனையில் செல்வகுமாா் வீட்டில் கணக்கில் வராத ரூ. 23 லட்சத்து 32 ஆயிரம் ரொக்கம், 180 சவரன் தங்க நகை, 1.97 கிலோ வெள்ளிப் பொருள்கள், பல கோடி மதிப்பில் நில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT