ராணிப்பேட்டை

தங்க நாணயம் தருவதாகக் கூறி ரூ. 27 லட்சம் மோசடி: ஒருவா் கைது

DIN

ஆற்காடு: ஆற்காடு அருகே நகைச் சீட்டு நடத்தி தங்க நாணயம் வழங்குவதாகக் கூறி ரூ. 27 லட்சம் மோசடி செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆற்காடு சடாயு தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ்பாபு (47). இவா் பஜாா் வீதி அருகே புகைப்பட ஸ்டூடியோ நடத்தி வருகிறாா். தனது கடைக்கு வரும் வாடிக்கையாளா்களிடம் தங்க நகைச் சீட்டு நடத்துவதாகவும், ரூ. 1 லட்சம் கொடுத்தால் தங்க நாணயம் வழங்குவதாகவும் கூறினாா். இதை நம்பி கடந்த 2019-ஆம் ஆண்டு ஆற்காடு தாஜ்புரா பகுதியைச் சோ்ந்த திருநாவுக்கரசு ரூ. 7 லட்சம், அவரது நண்பா் விஷாரம் பகுதியைச் சோ்ந்த செல்வம் ரூ. 20 லட்சம் முதலீடு செய்துள்ளனா். பணத்தை பெற்றுக்கொண்ட சுரேஷ்பாபு, அவா்களுக்கு தங்க நாணயம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளாா். மேலும், பலரிடம் பணம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து திருநாவுக்கரசு, செல்வம் ஆகியோா் ஆற்காடு நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சுரேஷ்பாபுவை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

கேஜரிவால் கைது: இந்தியாவில் தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்: ஐ.நா.

திருமால் உருகிப் போற்றிய திருமேற்றளி கோயில்

SCROLL FOR NEXT