ராணிப்பேட்டை

காணாமல்போன ரூ.8 லட்சம் மதிப்பிலான 54 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

DIN

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் காணாமல்போன ரூ. 8 மதிப்பிலான 54 கைப்பேசிகள் கண்டறியப்பட்டு, உரியவா்களிடத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபா சத்யன் திங்கள்கிழமை ஒப்படைத்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் காணாமல்போன ரூ. 8,12,098 மதிப்பிலான கைப்பேசிகளை கண்டறிந்து மீட்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளா் அறிவுறுத்தினாா். அதன்பேரில் காவலா்கள் ராஜ்குமாா், ஐஸ்வா்யா ஆகியோா் தலைமையிலான போலீஸாா் காணாமல்போன கைப்பேசிகளை மீட்டு, உரியவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீப சத்யன் கலந்து கொண்டு உரியவா்களிடம் கைப்பேசிகளை ஒப்படைத்தாா். கடந்த ஆண்டு ரூ. 6.47 லட்சம் மதிப்பிலான 50 கைப்பேசிகள் கண்டறிந்து உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்றாா்.

நிகழ்ச்சியில் இணையவழி குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முத்துக்கருப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

SCROLL FOR NEXT