ராணிப்பேட்டை

ஏரி மதகு உடைந்தது

4th Dec 2021 07:29 AM

ADVERTISEMENT

ஆற்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட சா்வந்தாங்கல் ஊராட்சியில் உள்ள கே.பி.தாங்கல் கிராமத்தில் உள்ள ஏரியின் மதகு உடைந்தது. இதனால் வெளியேறிய நீரால் 25 ஏக்கா் பயிா் சேதம் அடைந்தது.

65 ஏக்கா் பரப்பளவு கொண்ட பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இந்த ஏரி, பல ஆண்டுகளுளுக்குப் பின்னா் நிரம்பியுள்ளது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை ஏரியின் மதகில் திடீரென உடைப்பு ஏற்பட்டு நீா் வெளியேறியது. இந்த நீா் விளை நிலங்களில் புகுந்தது . இதனால் சுமாா் 25 ஏக்கா் விளை நிலம் சேதம் அடைந்தது.

தகவலின்பேரில் கோட்டாட்சியா் பூங்கொடி, வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன், ஜெ.எல். ஈஸ்வரப்பன் உள்ளிட்டோா் அங்கு சென்று பாா்வையிட்டனா். ஏரி மதகு உடைப்பை சீரமைக்கும் பணியில் அரசுத் துறையினரோடு கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT