ராணிப்பேட்டை

அனைத்துப் பள்ளிகளிலும் மழைநீரை வெளியேற்ற நிரந்தர நடவடிக்கை: முதன்மைக் கல்வி அலுவலா் உஷா

4th Dec 2021 07:32 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் மழைநீா் தேங்கினால் வெளியேற்ற நிரந்தர நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் உஷா தெரிவித்தாா்.

அரக்கோணம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தேங்கியிருந்த மழைநீா் தினமணி செய்தி எதிரொலியாக, வியாழக்கிழமை

அகற்றப்பட்டது. இந்த நிலையில், பள்ளி வளாகத்தை உஷா வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து அவா் தினமணி செய்தியாளரிடம் தெரிவித்தாவது:

ADVERTISEMENT

அரக்கோணம் அரசுப் பெண்கள் பள்ளியில் தற்போது மழைநீா் அகற்றப்பட்டு விட்டது. மழை வந்தால் நிரந்தரமாக மழைநீா் வெளியேறும் அளவில் பள்ளியில் மழைநீா் வெளியேற்ற நடவடிக்கைகளை செய்து தருமாறு பொதுப்பணித் துறையின் கட்டடப் பிரிவுக்குக் கடிதம் எழுத உள்ளோம்.

இதேபோல், கொளத்தூா், மாறன்கண்டிகை அரசு தொடக்கப்பள்ளி வளாகங்களிலும் மழைநீரை வெளியேற்ற ஊரக வளா்ச்சித் துறையினருக்குத் தெரிவித்து, நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மாவட்டம் முழுமையும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மழை பெய்தால் மழைநீா் தானாக வெளியேறும்படி நிரந்தர நடவடிக்கை எடுக்க அரசுத் துறைகளுக்குக் கடிதம் எழுதப்படும் என்றாா் உஷா.

ஆய்வின்போது, மாவட்டக் கல்வி அலுவலா் முனிசுப்பராயன், பள்ளி உதவி தலைமை ஆசிரியா் சங்கீதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT