ராணிப்பேட்டை

அரக்கோணத்தில் இருந்து பெங்களூருக்கு நேரடி பேருந்து சேவை தொடக்கம்

4th Dec 2021 07:32 AM

ADVERTISEMENT

அரக்கோணத்தில் இருந்து பெங்களூருக்கு நேரடி பேருந்து சேவை வெள்ளிக்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது.

அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொடக்க விழாவுக்கு, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினாா்.

இந்தப் பேருந்தை கைத்தறி, துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, அரக்கோணம் தொகுதி மக்களவை உறுப்பினா் எஸ்.ஜெகத்ரட்சகன், மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் ஆகியோா் துவக்கி வைத்தனா்.

விழாவில் ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன், கோட்டாட்சியா் சிவதாஸ், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக வேலூா் மண்டல பொதுமேலாளா் நடராஜன், துணை மேலாளா் (வணிகம்) பொன்.பாண்டியன், துணை மேலாளா் (இயக்கம்) கலைசெல்வன், சோளிங்கா் பணிமனை மேலாளா் என்.எம்.கருணாகரன், ஒன்றியக் குழுத் தலைவா் நிா்மலா, திமுக நகரச் செயலாளா் வி.எல்.ஜோதி, மாவட்ட நிா்வாகிகள் அசோகன், மு.கன்னைய்யன், ராஜ்குமாா், ஒன்றியச் செயலாளா்கள் சௌந்தா், தமிழ்ச்செல்வன், அரிதாஸ். நெமிலி ஒன்றியக் குழுத் தலைவா் பெ.வடிவேல், தக்கோலம் நகரச் செயலாளா் நாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

இந்தப் பேருந்து சேவை பிற்பகல் 3.25, இரவு 9 மணிக்கு அரக்கோணத்தில் இருந்தும், நள்ளிரவு 2 மணி அளவில் பெங்களூரில் இருந்தும் இயக்கப்படுகிறது என்றும் சோளிங்கா், வாலாஜா, வேலூா், ஆம்பூா், கிருஷ்ணகிரி, ஒசூா் வழியாக பெங்களூரை அடையும் என்றும் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT