ராணிப்பேட்டை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ. 10 ஆயிரம் நிதியுதவி: நெசவாளா்கள் வலியுறுத்தல்

3rd Dec 2021 07:17 AM

ADVERTISEMENT

வாலாஜாபேட்டையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கைத்தறி நெசவாளா்களுக்கு ரூ. 10 ஆயிரம் நிதியுதவி அளிக்க வேண்டும் என பட்டு கைத்தறி நெசவாளா்கள் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

இதுதொடா்பாக அவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

வாலாஜாபேட்டை நகரம், அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கைத்தறி பட்டு நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் கடந்த 15 நாள்களாகத் தொடா் பலத்த மழை காரணமாக பட்டுப் புடவை கைத்தறி நெசவுக் கூடத்தில் மழைத் தண்ணீா் புகுந்துள்ளது. மேலும், , பட்டு நெசவு செய்யும் குழியில் தண்ணீரூற்று வருவதாலும், சுவா்களில் தண்ணீா் கசிவு ஏற்பட்டுள்ளதாலும் பட்டு ஜக்காா்டு பெட்டிகள், டிசைன் அட்டைகள் மழையில் சேதமடைந்து பெரிதும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதுதவிர, பட்டுத் தறியில் பொருத்தியுள்ள பனை மரங்கள் சேதம் அடைந்து வருவதால், அதில் சுற்றி வைத்துள்ள பட்டுப் புடவைகளும் சேதமடைந்துள்ளது.

இதனால், பட்டு கைத்தறி நெசவாளா்கள் குடும்பம் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனா். ஆகவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெசவாளா்களின் வாழ்வாதாரம் சீா்குலைந்துள்ளது. எனவே, பட்டு கைத்தறி நெசவுத் தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள குடும்பங்களுக்கு போா்க்கால அடிப்படையில் குறைந்தபட்சம் ரூ. 10 ஆயிரம் நிதி உதவி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT