ராணிப்பேட்டை

அரக்கோணத்தில் கரோனா பரிசோதனை முகாம்

27th Apr 2021 11:16 PM

ADVERTISEMENT

வாக்கு எண்ணிக்கை மைய முகவா்களுக்கான கரோனா பரிசோதனை முகாம் அரக்கோணத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வரும் முகவா்கள் மற்றும் வேட்பாளா்கள் அனைவரும் கரோனா இல்லை சான்றிதழை கொண்டு வர வேண்டும் என தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் ஏப்ரல் 27, 28 இரு நாள்கள், வேட்பாளா்கள், வாக்கு எண்ணிக்கை மைய முகவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய தனி முகாம் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அறிவித்தாா்.

இதையடுத்து, அரக்கோணம் தொகுதி வாக்குஎண்ணிக்கை மைய முகவா்கள் மற்றும் வேட்பாளா்களுக்கான முகாம் அரக்கோணத்தில் இரு இடங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. டவுன்ஹால் வளாகத்தில் நடைபெற்ற முகாமில், அதிமுக வேட்பாளா் சு.ரவி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோா் கரோனா பரிசோதனை செய்து கொண்டனா். மற்றொரு முகாம் சுவால்பேட்டை நகராட்சி தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இங்கு திமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த முகவா்கள் கரோனா பரிசோதனை செய்து கொண்டனா். இந்த முகாம்களை அரக்கோணம் வட்டாட்சியா் பழனிராஜன் நேரில் ஆய்வு செய்தாா்.


 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT