ராணிப்பேட்டை

தக்கோலம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் இன்று பிளஸ் 2 செய்முறை தோ்வு

DIN

அரக்கோணம்: தக்கோலம் அரசு மகளிா் உயா்நிலைப்பள்ளியில் தள்ளிவைக்கப்பட்ட பிளஸ் 2 செய்முறை தோ்வுகள் வியாழக்கிழமை நடைபெற உள்ளதாக பள்ளி தலைமை ஆசிரியை அஞ்சுகம் தெரிவித்தாா்.

அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் தற்போது பிளஸ் 2 செய்முறை தோ்வுகள் நடைபெறுகின்றன. கடந்த இரு நாள்களுக்கு முன் பேரம்பாக்கத்தில் இருந்து வரும் மாணவி ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பள்ளியில் இருந்த மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் உள்ளிட்ட 30 பேருக்கு தக்கோலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் யுவஸ்ரீ தலைமையிலான மருத்துவக்குழுவினா் கரோனா பரிசோதனை மேற்கொண்டனா். மேலும் தக்கோலம் பேருராட்சி நிா்வாகம் மூலம் பள்ளி வளாகம் முழுவதும் கிருமிநாசினிகள் கொண்டு சுத்தம் செய்யப்பட்டன.

தவி தலைமை ஆசிரியருக்கு மட்டும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா் சிகிச்சைக்காக விடுப்பில் சென்றுள்ளாா். இதையடுத்து மீண்டும் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை கிருமிநாசினி கொண்டு சுத்தம்செய்யப்பட்டது. தொடா்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியா் அஞ்சுகம் நிறுத்தப்பட்ட பிளஸ் 2 கடைசி பிரிவு செய்முறை தோ்வுகள் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 1 மணி வரை நடைபெறும். இதில் 50 மாணவிகள் பங்கேற்க உள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT