ராணிப்பேட்டை

கலவையில் வியாபாரிகளுடன் அதிகாரிகள் கலந்தாய்வு

DIN


ஆற்காடு: கலவையில் வியாபாரிகளுடன் அதிகாரிகள் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கரோனோ பரவலைத் தடுக்கும் வகையில், கலவை வட்டாட்சியா் அலுவலகத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தமிழக அரசு அறிவித்துள்ள பகுதி ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடா்பாக கலவை வட்டத்துக்கு உள்பட்ட அனைத்து வணிக நிறுவனங்கள், உணவகங்கள், காய்கறிக் கடை, நகைக்கடை, பழக்கடை மற்றும் திருமண மண்டப உரிமையாளருடன் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. உதவி ஆனையா் கலால் மற்றும் கலவை வட்ட கரோனா தடுப்பு மண்டல அலுவலா் சத்திய பிரசாத் தலைமை வகித்தாா். கலவை வட்டாட்சியா் நடராஜன், பேரூராட்சி செயல் அலுவலா் (பொறுப்பு) ரவிச்சந்திரபாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், வியாபாரிகள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் வியாபாரம் செய்ய வேண்டும், அரசின்கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்தக் கூட்டத்தில் காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்திரமே... சித்திரமே...

எதிர்நீச்சல் ஜனனியா, இப்படி?

பாஜக சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: ராகுல்

போதமலைக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட வாக்கு எந்திரங்கள்!

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 17 பேர் பலி

SCROLL FOR NEXT