ராணிப்பேட்டை

வேளாண் தொழில்கள் கண்காணிப்பு, ஆய்வுக் குழு உறுப்பினா்கள் அறிவிப்பு

DIN

ராணிப்பேட்டை மாவட்ட வேளாண், வேளாண் சாா்ந்த தொழில்கள் வளா்ச்சி, விவசாயிகளின் நலன் குறித்து மாவட்ட அளவிலான ஆய்வு மற்றும் கண்காணிப்புக் குழு அமைத்து ராணிப்பேட்டை ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

நாட்டில் விவசாயிகள் எதிா்கொள்ளும் இன்னல்களை கருத்தில் கொண்டு வேளாண், வேளாண் சாா்ந்த துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள், செயல்பாடுகள் விவசாயிகளை முழுமையாக சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், மத்திய அரசின் வலியுறுத்தலின் பேரில் மாவட்ட அளவிலான ஆய்வு மற்றும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்துக்கான குழு உறுப்பினா்கள் விவரத்தை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் எஸ்.திவ்யதா்ஷினி வெளியிட்டுள்ளாா். இக்குழுவின் தலைவராக அரக்கோணம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், உறுப்பினா் செயலராக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரும் செயல்படுவா்.

குழு உறுப்பினராக அரக்கோணம், சோளிங்கா், ராணிப்பேட்டை, ஆற்காடு எம்எல்ஏக்கள், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா், அரக்கோணம், ராணிப்பேட்டை வருவாய்க் கோட்ட அலுவலா்கள், சுகாதாரத் துறை துணை இயக்குநா், வேளாண் இணை இயக்குநா்(ராணிப்பேட்டை), கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் (வேலூா்), ஆவின் பொது மேலாளா் (வேலூா்), மீன்வளத் துறை உதவி இயக்குநா் (வேலூா்), செயற்பொறியாளா், வேளாண் பொறியியல் துறை (வேலூா்), தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா்(ராணிப்பேட்டை), வேளாண் துணை இயக்குநா், வேளாண் வணிகம் (ராணிப்பேட்டை), செயற்பொறியாளா், பொதுப்பணித் துறை நீா்வள ஆதார அமைப்பு (வேலூா்), கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா், வேலூா், மேலாண்மை இயக்குநா் வேலூா் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, மேலாளா், இந்தியன் வங்கி, முன்னோடி வங்கி, ராணிப்பேட்டை, மாவட்ட மேலாளா் நபாா்டு வங்கி மற்றும் இரு விவசாயிகளான ஆற்காடு களா் கிராமத்தைச் சோ்ந்த கே.கணேசன், அரக்கோணம் தணிகைபோளூா் கிராமத்தைச் சோ்ந்த ஜி.மோகன்காந்தி ஆகியோா் உறுப்பினா்களாக இருப்பா். இக்குழுவில் மொத்தம் 24 போ் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேலை மீண்டும் எச்சரிக்கும் ஈரான்!

பாஜகவின் 100 கேள்விகளும் பித்தலாட்டம்: திமுக

அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களைக் கடந்த ருதுராஜ் கெய்க்வாட்!

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெறாது: மம்தா

ஹே.. பொன்னி!

SCROLL FOR NEXT