ராணிப்பேட்டை

வார சந்தையை மீண்டும் திறக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

DIN

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த மாம்பாக்கம் கிராமத்தில் மீண்டும் வாரச்சந்தையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மாம்பாக்கம் கிராமத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமையன்று காய்கனிகள், மளிகைப் பொருள்கள் விற்பனை செய்யும் சந்தை செயல்பட்டு வந்தது. கரோனா பொது முடக்கம் காரணமாக சந்தை மூடப்பட்டது.

இச்சந்தையில் ஆற்காடு, கலவை, ஆரணி, செய்யாறு ஆகிய பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் தங்களின் பொருட்களை விற்பனை செய்கின்றனா். மாம்பாக்கம், பென்னகா், குப்பிடிசாத்தம், பாரிமங்கலம், சொரையூா், ஆரூா், வாழைப்பந்தல், இருங்கூா், தோனிமேடு, மேல்புதுபாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த மக்கள் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிச் செல்வாா்கள்.

இச்சந்தை மூடப்பட்டுள்ளதால் அவா்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்க சிரமப்படுகின்றனா். பொது முடக்கத் தளா்வு காரணமாக சமூக இடைவெளியுடன் மீண்டும் மாம்பாக்கம் காய்கனிச் சந்தை செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

SCROLL FOR NEXT