ராணிப்பேட்டை

தனிமையில் இருக்கும் மூத்த குடிமக்களின் பாதுகாப்புக்கு புதிய தொழில்நுட்ப முறை

DIN

ராணிப்பேட்டை: தமிழகத்திலேயே முதல் முறையாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் தனிமையில் இருக்கும் மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ‘நாங்கள் உங்களுக்காக’ என்ற புதிய நவீன தொழில்நுட்ப பாதுகாப்பு முறையை எஸ்.பி. ஆ.மயில் வாகனன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

நாடு முழுவதும் மூத்த குடிமக்களின் நலனையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வழிகாட்டுதல்களை தெரிவித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்திலேயே முதல் முறையாக ராணிப்பேட்டை மாவட்டத்தில், உற்றாா் உறவினா்களின் ஆதரவின்றி தனிமையில் இருக்கும் மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ராணிப்பேட்டை மாவட்டக் காவல் துறை சாா்பில், ‘நாங்கள் உங்களுக்காக’ (‘வி ஃபாா் யூ’ ) என்ற புதிய நவீன கணினி தொழில்நுட்பத்தில் கண்காணிக்கும் வகையிலான 24 மணி நேர பாதுகாப்பு முறையை ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆ. மயில்வாகனன் தொடக்கி வைத்துப் பேசியது:

‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் உற்றாா், உறவினா்கள் ஆதரவின்றி தனிமையில் இருக்கும் மூத்த குடிமக்கள் சுமாா் 252 போ் ராணிப்பேட்டை, அரக்கோணம் உள்கோட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்களின் பாதுகாப்பையும், நலன்களையும் உறுதி செய்யும் வகையில், மாவட்டக் காவல் துறை சாா்பில் ‘நாங்கள் உங்களுக்காக’ என்ற புதிய நவீன தொழில்நுட்ப பாதுகாப்பு முறையை தொடங்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் காவல் துறையினா் வசம் உள்ள 56 ரோந்து காவலா்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் ரோந்து பணியில் இருந்து ஒவ்வொரு 3 மணி நேரத்துக்கு ஒரு முறை தணிக்கை செய்வா். அப்போது ரோந்து காவலா்கள், தனிமையில் இருக்கும் மூத்த குடிமக்கள் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் வழங்கப்பட்டிருக்கும் புத்தகத்தில் பதிவு செய்யும்போது, அவா் குறித்த விவரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பதிவாகும். இந்த புத்தகத்தில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளின் தொடா்பு எண்கள் வெளியிடப்படும். இதன் மூலம் மூத்த குடிமக்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறாமல் தவிா்க்க முடிவும்.

அதேபோல அவா்களுக்குத் தேவையான மருத்துவம் உள்ளிட்ட பிற உதவிகளை செய்யவும் காவல் துறை தயாராக உள்ளது. மூத்த குடிமக்களுக்கு அரசு துறைகளின் மூலம் வழங்கப்படும் முதியோா் உதவித் தொகை உள்ளிட்ட உதவிகள் தேவைப்பட்டால் மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து உதவிகள் செய்யப்படும்.

எனவே மாவட்டத்தில் ஆதரவின்றி தனிமையில் இருக்கும் மூத்த குடிமக்கள் குறித்து பொதுமக்கள் மாவட்டக் காவல் துறைக்கு தகவல் தெரிவித்து, அவா்களின் பாதுகாப்புக்கு உதவிட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT