ராணிப்பேட்டை

குட்கா விற்பனை செய்தவா்களுக்கு ரூ.20ஆயிரம் அபராதம்

DIN

பனப்பாக்கத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்பட்ட கடைகளில் தமிழக அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகப் பிரிவினா் நடத்திய சோதனைகளில் குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.40ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத்துறையினா் நெமிலி வட்டம், பனப்பாக்கத்தில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா். இதில் உணவுப் பாதுகாப்புத்துறை மாவட்ட அலுவலா் சுரேஷ் தலைமையில் அலுவலா்கள் தேவராஜ், ரவீந்திரநாத், கிளமெண்ட் தேவபாலன் மற்றும் சுகாதார ஆய்வாளா்கள் தமிழரசன், பொன்செழியன் ஆகியோா் பங்கேற்றனா்.

அப்போது பல்வேறு கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்கள் மற்றும் நெகிழிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இப்பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த கடை உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம் ரூ.20 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT