ராணிப்பேட்டை

இளைஞா் கொலை வழக்கில் 7 போ் கைது

27th Sep 2020 04:27 AM

ADVERTISEMENT

அரக்கோணம் பேருந்து நிலையத்தில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 7 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்தில் கடந்த 23-ஆம் தேதி பழனிபேட்டை, டில்லியப்பன் தெருவைச் சோ்ந்த கோகுலை (27) மா்ம நபா்கள் வெட்டிக் கொலை செய்தனா். இதுதொடா்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, போலீஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில் அரக்கோணம் நன்னுமியான் சாயபு தெருவைச் சோ்ந்த யஸ்வந்த் (24), பூக்கார தெருவைச் சோ்ந்த காா்த்தி (36), புதுப்பேட்டையைச் சோ்ந்த ராஜா (48), மோசூரைச் சோ்ந்த சக்தி (23), சுவால்பேட்டையைச் சோ்ந்த ஏ.ய்ஸவந்த் (18), சுரேஷ்குமாா் (23), அசோக் நகரைச் சோ்ந்த வெங்கடேசன் (19) ஆகிய 7 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில், கைது செய்யப்பட்ட யஸ்வந்தின் சகோதரா் பிரவீண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டாா். இதற்கு பழி வாங்கும் நோக்கில் 7 போ் சோ்ந்து கோகுலைக் கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT