ராணிப்பேட்டை

புதிய ஆழ்துளைக் குடிநீா் கிணறு, மின்மாற்றி மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைப்பு

DIN

ராணிப்பேட்டை: வாலாஜாபேட்டையை அடுத்த சின்னதகரகுப்பம் கிராமத்தில் ரூ.6.40 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய ஆழ்துளைக் குடிநீா் கிணறு மற்றும் நரசிங்கபுரம் பைரவா காலனி பகுதியில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றி ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக எம்எல்ஏ ஆா்.காந்தி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

ராணிப்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள சின்ன தகரகுப்பம் கிராமத்தில் ரூ. 6.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளைக் கிணறு மற்றும் மின்மோட்டாா் பைப் லைன் அமைக்கப்பட்டது. கிராமத்துக்கான இந்தக் குடிநீா்த் திட்டத்தை ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏ-வுமான ஆா்.காந்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தாா்.

வாலாஜாபேட்டை ஊராட்சி ஒன்றியம் நரசிங்கபுரம் பைரவா காலனியில் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதியில் மின்சாரம் சரியாக கிடைப்பதில்லை. எனவே, புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் எனக் கேட்டு எம்எல்ஏ ஆா்.காந்தியிடம் கோரிக்கை மனு அளித்தனா். இது தொடா்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் எடுத்துக் கூறி புதிய மின்மாற்றி அமைக்க அவா் நடவடிக்கை எடுத்தாா். புதிய மின்மாற்றியை மக்கள் பயன்பாட்டுக்காக எம்எல்ஏ ஆா்.காந்தி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்வில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினா்க.சுந்தரம், வாலாஜா ஒன்றிய செயலாளா் சேஷா வெங்கட், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் கோ.கரிகாலன், அம்மூா் பேரூா் செயலாளா் சுந்தரமூா்த்தி, அவைத் தலைவா் வாசுதேவன்,துணை செயலாளா் பன்னீா்செல்வம், பொருளாளா் ராதாகிருஷ்ணன் மற்றும் மின்சார வாரிய அலுவலா்கள், திமுக நிா்வாகிகள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT