ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் பெரியாரின் 142-வது பிறந்த நாள்

17th Sep 2020 11:59 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டையில் பெரியாரின் 142-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தமிழகம் முழுவதும் தந்தை பெரியாரின் 142-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட  திமுக சார்பில், சமத்துவத்தில் உள்ள தந்தை பெரியாரின் திருவுருபடத்திற்கு ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான ஆர்.காந்தி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட மாணவரணி அமைப்பாளர்,வினோத், வாலாஜா ஒன்றிய திமுக செயலாளர் சேஷா வெங்கட், நகர பொறுப்பாளர் பூங்காவனம், துணை செயலாளர்கள் ஏஆர்எஸ் சங்கர், ஏர்டெல் குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் வழக்குரைஞர் ஜெயக்குமார், பிஞ்சி அசேன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

Tags : Ranipettai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT