ராணிப்பேட்டை

சோளிங்கா் அரசு கலைக் கல்லூரியில் இணையவழி வகுப்புகள் தொடக்கம்

DIN


அரக்கோணம்: சோளிங்கா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டுக்கான இணையவழி வகுப்புகள் புதன்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ரங்கநாதன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சோளிங்கரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடக்கப்படும் என அரசு அறிவித்ததை அடுத்து நிகழ் கல்வியாண்டிலேயே சோளிங்கரில் தற்காலிக இடத்தில் கல்லூரி தொடங்கப்பட்டது.

அதன்படி, 2020-2021-ஆம் ஆண்டுக்கான முதலாமாண்டு சோ்க்கை பி.ஏ(தமிழ்), பி.ஏ.(ஆங்கிலம்), ஆங்கில வழியில் பி.காம்., பி.எஸ்சி. (கணிதம்), பி.எஸ்சி. (கணினி அறிவியல்) ஆகிய பாடப் பிரிவுகளுக்கு நடைபெற்றது.

இதுவரை அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் சோ்ந்து 240 மாணவ, மாணவிகள் சோ்க்கப்பட்டனா். தொடா்ந்து சோ்க்கை நடைபெற்று வருகிறது. மேலும், முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்காக இணையவழி வகுப்புகள் புதன்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

SCROLL FOR NEXT