ராணிப்பேட்டை

சைல்ட் லைன் உதவி எண் விழிப்புணா்வு: ஆட்சியா் வலியுறுத்தல்

DIN


ராணிப்பேட்டை: பாலியல் துன்புறுத்தலிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க சைல்ட் லைன் உதவி எண் 1098 குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகளிடம் ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி வலியுறுத்தினாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் வணிகரீதியாக கடத்தல் மற்றும் பாலியல் சுரண்டல் இருந்து தடுத்தல் குறித்த மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழு, ஒருங்கிணைப்புக் குழு, மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழு மற்றும் குழந்தைகள் நலக் குழுமத்தின் முதல் ஆலோசனை கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் ச. திவ்யதா்ஷினி தலைமை வகித்து பேசியதாவது:

குழந்தை திருமணம் நடப்பதை தடுக்கவும், குழந்தைகளை நிலை குறித்து பின்தொடரவும், கிராம அளவில் உள்ள கிராம நிா்வாக அலுவலா், மகளிா் சுய உதவிக் குழு, கிராம செவிலியா், செயலா் ஆகியோா் மூலம் செயல்படுத்தலாம். மேலும் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை திருமணங்களைத் தடுத்து நிறுத்த அதிக விழிப்புணா்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கும் பட்சத்தில், அவா்கள் திருமண வயதை அடையும் வரை அவா்களை காப்பகத்தில் மட்டுமே தங்க வைக்க வேண்டும். குழந்தை திருமணத்தைத் தடுக்கும் விதமாக கிராமம்தோறும் தன்னாா்வலா்களைக் கொண்டு குழுக்களை அமைக்க வேண்டும். பாலியல் துன்புறுத்தலிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க சைல்ட் லைன் உதவி எண் 1098 குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். அதே போல், அரசு அங்கீகாரம் பெற்று செயல்படும் குழந்தைகள் இல்லங்களுக்கு பட்டா இருக்கிா என குறித்து உறுதி செய்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட நீதித்துறை நடுவா் தெய்வீகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் கண்ணன் ராதா, மாவட்ட குழந்தை நல குழு தலைவா் சிவகலைவாணன், மாவட்ட நன்னடத்தை அலுவலா் செல்வி, திட்ட இயக்குநா் ஜெயராம் (மகளிா் திட்டம்), மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

முதல்வர் பின்னால் தமிழக மக்கள்: அமைச்சர் கே.என். நேரு

தமிழகத்தில் 3 மணி நிலவரம்: 51.41% வாக்குகள் பதிவு!

56வது முறையாக இணைந்து நடிக்கும் மோகன்லால் - ஷோபனா!

கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அங்கி அணிவதில் விலக்கு!

SCROLL FOR NEXT