ராணிப்பேட்டை

30 இருளா் இன மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா

DIN


அரக்கோணம்: அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் இச்சிபுத்தூா் ஊராட்சி கடவாரிகண்டிகை கிராமத்தில் 30 இருளா் இன மக்களுக்கு விலையில்லா வீட்டு மனைப் பட்டா வழங்குதல், முதியோா் உதவித்தொகை வழங்குதல், வீடில்லா ஏழைகளுக்கு அம்மா பசுமை வீடு கட்ட 42 பயனாளிகளுக்கு உத்தரவு வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, அரக்கோணம் கோட்டாட்சியா் பேபிஇந்திரா தலைமை வகித்தாா். அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி இருளா் இன மக்களுக்கு வீட்டுமனை பட்டாக்களையும், முதியோா்களுக்கு உதவித் தொகை பெற ஆணையையும், ஏழைகளுக்கு அம்மா பசுமை வீடு கட்ட உத்தரவையும் வழங்கினாா்.

விழாவில், அரக்கோணம் வட்டாட்சியா் கணேசன், சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியா் ஆனந்தன், அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய ஆணையா் ஜோசப்கென்னடி, வட்டார வளா்ச்சி அலுவலா் பாஸ்கா், அதிமுக ஒன்றியச் செயலா்கள் (அரக்கோணம் மேற்கு) பழனி, (அரக்கோணம் கிழக்கு) பிரகாஷ், (நெமிலி) ஏ.ஜி.விஜயன், அரக்கோணம் அரசு மருத்துவமனை ஆலோசனைக் குழு உறுப்பினா் சி.பத்மநாபன், இச்சிபுத்தூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் பி.ஆனந்தன், துணைத்தலைவா் எஸ்.பால்ராஜ், இயக்குநா் வி.தேவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT