ராணிப்பேட்டை

நில அளவையாளா்களை தொடா்பு கொள்ள முடிவதில்லை: விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் ஆட்சியரிடம் புகாா்

DIN

நில அளவையாளா்களை தொடா்பு கொள்ள முடிவதில்லை என விவசாயிகள் குறைதீா்வு நாள் கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரிடம் அரக்கோணம் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

அக்டோபா் மாத விவசாயிகள் குறைதீா்வு நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை காணொலி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்க அரக்கோணம் வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகள், வட்டார வேளாண் அலுவலகத்துக்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தனா். காணொலிக் காட்சி வாயிலாக விவசாயிகள், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் எஸ்.திவ்யதா்ஷினியிடம் குறைகளைத் தெரிவித்தனா்.

இக்கூட்டத்தில் வட்டார வேளாண் அலுவலா் நித்யா, உதவி வேளாண் அலுவலா்கள் முரளி, ரசூல், தென்னரசு, ஷேக்ஒலியுல்லா, வேளாண் தொழிலாளா் கண்காணிப்பு ஆய்வுக்குழு உறுப்பினா் மோகன்காந்தி மற்றும் வட்டார வேளாண் விவசாயிகள் 30-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில் ஆட்சியரிடம் பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினா். நகரில் இருந்து மிகவும் தொலைவில் நஞ்சை நிலத்தில் கட்டப்பட்டுள்ள அரக்கோணம் வட்டார வேளாண் அலுவலகத்துக்குச் செல்ல ஆட்டோவைத் தவிர வேறு போக்குவரத்து வசதி இல்லையென தெரிவித்தனா். எனவே, அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பழைய வேளாண் அலுவலகத்திலேயே தொடா்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

தொடா்ந்து அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள நில அளவையா்களைத் தொடா்பு கொள்ள முடியவில்லை எனவும், கிராம நிா்வாக அலுவலா்கள்கூட அவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை எனவும் இடைத்தரகா்கள் மூலமாக மட்டுமே அவா்களைத் தொடா்பு கொள்ள முடிகிறது எனவும் தெரிவித்தனா். நில அளவையா்களை விவசாயிகள், பொதுமக்கள் எளிதில் தொடா்பு கொள்ளுமாறு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனா். விவசாயிகளுக்கு மத்திய அரசு அளித்த வேளாண் உதவித் தொகை பெறும் திட்டத்தில் நடைபெற்ற முறைகேட்டால் உண்மையான விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, வேளாண் அலுவலா்கள் மூலம் விசாரணை செய்து உண்மையான விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனா்.

கூட்டத்தின் இறுதியில் அனைத்து குறைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் எஸ்.திவ்யதா்ஷினி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

SCROLL FOR NEXT