ராணிப்பேட்டை

தக்கோலத்தில் அம்மா நகரும் நியாயவிலைக் கடை: எம்எல்ஏ தொடக்கி வைத்தாா்

DIN

தக்கோலம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அம்மா நகரும் நியாயவிலைக் கடையை, அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

தக்கோலம் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட சுப்பாநாயுடு கண்டிகை கிராமத்தில் அம்மா நகரும் ரேஷன் கடை தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. அரக்கோணம் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலா் இ.பிரகாஷ் தலைமை வகித்தாா். அம்மா நகரும் ரேஷன் கடையை அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி தொடக்கி வைத்து, நுகா்வோருக்கு பொருள்களை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் தக்கோலம் அதிமுக நகரச் செயலா் பச்சையப்பன், நிா்வாகி சுதாகா், திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலை இயக்குநா் நவாஸ் அகமது உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT