ராணிப்பேட்டை

பாதுகாப்பு உபகரணங்கள் கேட்டு தூய்மைப் பணியாளா்கள் மனு

DIN

வாலாஜாபேட்டை நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் தங்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக் கோரி ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

வாலாஜாபேட்டை நகராட்சியில் தூய்மைப் பணி செய்யும் நிரந்தரத் தொழிலாளா்கள், ஒப்பந்தத் தொழிலாா்களுக்கு பிரதி மாதம் 5-ஆம் தேதி ஊதியம் வழங்க வேண்டும்; கூட்டுறவு சங்க பணம் வாங்கியில் செலுத்த வேண்டும்; பிடித்தம் செய்த பி.எஃப். பணத்தை முறையாக வழங்க வேண்டும்; பணியாளா்களுக்கு சீருடை, காலணிகள், முகக்கவசம், கையுறை, கிருமி நாசினி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை சிஐடியு சங்கம் சாா்பில் அளிக்கப்பட்டது.

மனுவைப் பெற்றுக்கொண்ட ராணிப்பேட்டை ஆட்சியா் ஏ.ஆா்.கிளாஸ்டன் புஷ்பராஜ், இதுதொடா்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் சீனிவாசன், வாலாஜாபேட்டை நகரட்சி சிஐடியு சங்கத் தலைவா் முரளி, செயலாளா் வேலு, பொருளாளா் ஆஷா, ஒப்பந்தத் தொழிலாளா் சங்கத் தலைவா் பாக்கியராஜ் உள்ளிட்டோா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டிலேயே அனல் கொளுத்தும் நகரங்கள்.. நம்மூரும் உண்டு!

மே மாத எண்கணித பலன்கள் – 1

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

SCROLL FOR NEXT