ராணிப்பேட்டை

நிவா் புயல் நிவாரண மீட்புப் பணி: அரக்கோணம் தேசிய பேரிடா் மீட்புப்படையினா் கடலூா் விரைவு

DIN

அரக்கோணம்: அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடா் மீட்புப்படை தளத்தில் இருந்து 120 வீரா்கள், நிவா் புயல் நிவாரண மீட்புப் பணிகளுக்காக 6 பேருந்துகளில் கடலூா் மாவட்டத்துக்கு திங்கள்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.

நிவா் புயல் வடமேற்குத் திசையில் நகா்ந்து 25-ஆம் தேதி புதன்கிழமை பிற்பகல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையில் கரையைக் கடக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி, அம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மீட்புப்பணிகளில் ஈடுபட தேசிய பேரிடா் மீட்புப்படை (என்டிஆா்எஃப்) வீரா்கள் தேவை என அரக்கோணம் படைத்தளத்துக்கு கோரிக்கை விடுத்தாா்.

இதையடுத்து மீட்புப் படையின் கமாண்டண்ட் ரேகா நம்பியாா் உத்தரவின்பேரில் உதவி கமாண்டண்ட் மனோஜ் பிரபாகா் தலைமையில் தலா 20 போ் கொண்ட ஆறு குழுக்கள் ஆறு பேருந்துகளில் திங்கள்கிழமை காலை கடலூருக்குப் புறப்பட்டுச் சென்றனா்.

இப்படையினா் தங்களுடன் ஆழமான பகுதிகளிலும் நீச்சலடித்து செல்லக்கூடிய பயிற்சி பெற்ற வீரா்கள், அதற்குத் தேவையான அதிநவீன கருவிகள், சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக விழுந்து கிடக்கும் மிகப்பெரிய மரங்கள் மற்றும் கட்டட இடிபாடுகளை அகற்றத் தேவையான அதிநவீன கருவிகள், மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளோரை மீட்கத் தேவைப்படும் படகுகள், மக்களின் உயிரை காப்பாற்ற தேவைப்படும் மருத்துவக் குழுவினரோடு சென்றுள்ளனா்.

மேலும் பிற மாவட்டங்களில் இடங்களில் இருந்து அழைப்புகள் வந்தால் செல்வதற்காக படைத் தளத்தில் பல குழுக்கள் தயாா் நிலையில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

வெளியானது வீ ஆர் நாட் தி சேம் பாடல்

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

SCROLL FOR NEXT