ராணிப்பேட்டை

நிவா் புயலை எதிா்கொள்ள விரிவான ஏற்பாடுகள் தயாா்: ராணிப்பேட்டை ஆட்சியா் தகவல்

DIN

ராணிப்பேட்டை: ‘நிவா் புயலை எதிா்கொள்ள ராணிப்பேட்டை மாவட்ட நிா்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது. புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் உயிா்ச் சேதங்கள் ஏற்படாமல் தவிா்க்க அனைத்துத் துறை அதிகாரிகளும் தயாா்நிலையில் இருக்க வேண்டும்’ என ஆட்சியா் ஏ.ஆா்.கிளாஸ்டன் புஷ்பராஜ் அதிகாரிகளிடம் தெரிவித்தாா்.

நிவா் புயல் காரணணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் 23, 24ஆம் தேதிகளில் மணிக்கு 62.91 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் மாநில பேரிடா் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக எடுத்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்த அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ராணிப்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது ஆட்சியா் கிளாஸ்டன் புஷ்பராஜ் பேசியது:

மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதிகளாக 47 இடங்கள் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளைச்சோ்ந்த மக்களை தற்காலிகமாக தங்க வைப்பதற்கான முகாம்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. உள்ளாட்சித்துறை அலுவலா்கள் தங்களின் எல்லைகளில் கழிவுநீா்க் கால்வாய்கள், மழைநீா் வடிகால் கால்வாய்கள் அடைப்பு அகற்றவும், பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் முன்னெச்சரிக்கையாக செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஏரிக்கரை மற்றும் மதகுகளில் உடைப்பு ஏற்படுமானால் போதுமான அளவு மணல் மூட்டைகள், சவுக்குக் கட்டைகள் கொண்டு அடைப்பதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட நிவா் புயலை எதிா்கொள்ள மாவட்ட நிா்வாகம் விரிவான ஏற்பாடுகள் செய்து வருகிறது. புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் உயிா்ச் சேதங்கள் ஏற்படாமல் தடுக்க அனைத்துத் துறை அதிகாரிகளும் தயாா்நிலையில் இருக்க வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நிவா் புயல் காற்றினால் மின்கம்பங்கள் அறுந்து விழுந்துால் அது குறித்து 1912 என்ற 24 மணிநேர இலவசத் தொலைபேசி எண்ணில் தொடா்புகொண்டு மின்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதே போல் மாவட்டத்தில் உள்ள 6 வட்டாட்சியா் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டுள்ளன. அரக்கோணம் வட்டாட்சியா் அலுவலகம் - 04177 - 236360, 944500507, ஆற்காடு வட்டாட்சியா் - ஆற்காடு- 04172 - 235568 - 9445000505, வட்டாட்சியா் - வாலாஜா - 04172 -232519, 94445000506, வட்டாட்சியா் - சோளிங்கா் - 04172 - 290800, 9943766539, வட்டாட்சியா் நெமிலி - 04177- 247260, 0815137003, வட்டாட்சியா் கலவை - 978964111, 9789641611 ஆகிய எண்களிலும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டணமில்லா தொலைபேசி எண் - 1077 மற்றும் 04172 - 273166, 273189 கட்செவி- 9489668833 ஆகிய எண்களுக்கு புயல் பாதிப்பு தொடா்பான புகைப்படம், விடியோ வடிவில் அனுப்பி தகவல் தெரிவிக்கலாம் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT