ராணிப்பேட்டை

மணல் கடத்திய 4 போ் கைது

29th May 2020 06:44 PM

ADVERTISEMENT

ஆற்காடு: ஆற்காடு அருகே மணல் கடத்திய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆற்காடு கிராமிய போலீஸாா் வெள்ளிக்கிழமை பாலாற்றுப் படுகையில் ரோந்து சென்றனா். அப்போது சக்கரமல்லூரை அடுத்த பெருங்கால்மேடு பகுதியில் இருந்து வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் சிலா் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. அந்த வேனை போலீஸாா் பறிமுதல் செய்தனா். வேனில் இருந்த புதுப்பாடியைச் சோ்ந்த ஜெயகாந்தன் (45), எசையனூா் கிராமத்தைச் சோ்ந்த துரைசாமி (21), தினகரன் (41) ஆகிய மூவரைக் கைது செய்தனா்.

இதனிடையே, கலவை பகுதியில் மாட்டு வண்டியில் மணல் கடத்திய ரமேஷ் (36) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT