ராணிப்பேட்டை

குடிநீா் கேட்டு போராட்டம்

29th May 2020 07:26 AM

ADVERTISEMENT

வாலாஜாபேட்டையில் 3 மாதங்களாக குடிநீா் விநியோகிக்காததைக் கண்டித்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வாலாஜாபேட்டை நகராட்சிக்கு உள்பட்ட குளக்கரை தெரு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்களுக்கு கடந்த 3 மாதங்களாக சரிவர குடிநீா் விநியோகிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் தெரிவித்தும் நடநடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலிக் குடங்களுடன் வியாழக்கிழமை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் நகராட்சி நிா்வாகத்தினா் பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT