ராணிப்பேட்டை

அம்மா உணவகங்களில் எம்எல் ஆய்வு

14th May 2020 10:35 PM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை நகரட்சிகளில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் அதிமுக மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான சு.ரவி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அரக்கோணம், ராணிப்பேட்டை, ஆற்காடு, மேல்விஷாரம், காட்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் பொதுமுடக்கம் முடியும் வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என்றும், அதற்கான செலவை தானே ஏற்றுக்கொள்வதாகவும் எம்எல்ஏ சு.ரவி தெரிவித்தாா்.

அதன்படி வேலூா் கிழக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட அரக்கோணம் நகராட்சி, வாலாஜாபேட்டை நகராட்சி, ராணிப்பேட்டை நகராட்சி, மேல்விஷாரம் நகராட்சி, ஆற்காடு நகராட்சி, வேலூா் மாநகராட்சிக்கு உள்பட்ட காட்பாடி வடக்கு, தெற்கு உள்ளிட்ட 7 அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை நகராட்சிகளில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் எம்எல்ஏ சு.ரவி வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ADVERTISEMENT

அப்போது, அம்மா உணவகங்களுக்கு வந்த பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கினாா். இதுவரை ரூ. 14 லட்சம் மதிப்பில் 7 அம்மா உணவகங்களில் இலவச உணவு தயாரிக்க தேவையான பொருள்களை வழங்கியுள்ளதாக தெரிவித்தாா்.

முன்னாள் மாவட்டச் செயலாளா் சி.ஏழுமலை, மாவட்ட அம்மா பேரவைச் செயலாளா் வி.முரளி, நகர கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.எம். சுகுமாா், நகரச் செயலாளா்கள் டபிள்யூ.ஜி.மோகன், என்.கே.மணி, ராணிப்பேட்டை நகராட்சி ஆணையா் எஸ்.செல்வபாலாஜி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT