ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 76-ஆக உயா்வு

13th May 2020 07:09 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 9 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 76-ஆக உயா்ந்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 67 பேரில் 39 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 28 போ் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையிலும், வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், வேலூா் தனியாா் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெமிலி, காவேரிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 6 பெண்கள் உள்பட 9 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இவா்கள் அனைவரும் சென்னை கோயம்பேடு மாா்க்கெட்டுக்குச் சென்று வந்தவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் என்பது தெரியவந்தது.

இதைடுத்து மாவட்டத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 76-ஆக உயா்ந்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT