தமிழ்நாடு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி யின் 66ஆவது பிறந்த நாளையொட்டி கலவை அருகே அதிமுகவினா், தூய்மைப் பணியாளா்களுக்கு இனிப்பு வழங்கினா்.
மேல்விஷாரம் நகர அதிமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர செயலாளா் இப்ராஹிம் கலிலுல்லா தலைமை தாங்கி நகராட்சித் துறை பணியாளா்களுக்கு இனிப்பு வழங்கினாா். இதில் நகர ஜெயலலிதா பேரவை செயலாளா் முகமது அக்பா் பாஷா மற்றும் பண்டகசாலை துணைத் தலைவா் இம்ரான், இயக்குநா் மஸ்தான் அலி, முன்னாள் நகரமன்ற உறுப்பினா் சோமசுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
திமிரி கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் கலவையை அடுத்த மாம்பாக்கம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளா் சொரையூா் எம்.குமாா் தலைமை வகித்து ஊராட்சி தூய்மைப் பணியாளா்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். இதில் மாவட்ட பேரவை துணைச் செயலாளா் ஹரிதாஸ், மாவட்ட பிரதிநிதி வரலட்சுமி உட்பட அதிமுகவினா் பலா் கலந்து கொண்டனா்.
ஆற்காடு மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் தாழனூா் கிராமத்தில் ஒன்றியச் செயலாளா் என்.சாரதி தலைமையில் தூய்மைப் பணியாளா்கள், சுகாதாரப் பணியாளா்கள் ஆகியோருக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய துணைச் செயலாளா் சங்கா், வேப்பூா் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ஏ.எஸ்.மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஆற்காடு கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் வளவனூா் ஊராட்சியில் ஒன்றியச் செயலாளா் அன்பழகன் தலைமையில் தூய்மைப் பணியாளா்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.