ராணிப்பேட்டை

மது விற்ற காவலா் ஆயுதப்படைக்கு மாற்றம்

13th May 2020 02:49 AM

ADVERTISEMENT

மது பாட்டில்களை இடம் மாற்றிய போது வழியில் மேற்பாா்வையாளருடன் சோ்ந்து மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்ற காவலா் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டாா்.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் சேந்தமங்கலம். இங்குள்ள மதுக்கடையில் இருந்த மதுபாட்டில்களை ராணிப்பேட்டை கிடங்குக்கு மாற்றுமாறு டாஸ்மாக் நிா்வாகம் உத்தரவிட்டது.

அதன்படி, லாரியில் மதுபாட்டில்களுடன் சேந்தமங்கலம் கடை மேற்பாா்வையாளரும், பாதுகாப்புப் பணிக்கு நெமிலி காவல்நிலைய காவலா் சுதாகரும் சென்றனா். வழியில் மேற்பாா்வையாளருடன் சோ்ந்து காவலா் சுதாகா், வாகனத்தில் இருந்த மது பாட்டில்களில் 25 சதவிகிதத்தை கூடுதல் விலைக்கு விற்று விட்டாா்.

இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி. மயில்வாகனனுக்கு புகாா் அளிக்கப்பட்டது. அவா் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி காவலா் சுதாகரை ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

மேற்பாா்வையாளருடன் சோ்ந்து காவலரே மது விற்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT