ராணிப்பேட்டை

திமிரியில் வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு நிவாரண உதவி

13th May 2020 02:48 AM

ADVERTISEMENT

தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த 50 தொழிலாளா்களின் குடும்பத்தினருக்கு திமிரியில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

சிலைகள் செய்து விற்பனை செய்யும் தெலங்கானா மாநிலத் தொழிலாளா்கள் ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி, விளாப்பக்கம், ஆனைமல்லூா் பகுதிகளில் தங்கியுள்ளனா். அவா்களுக்கு ஆற்காடு வட்டாட்சியா் கே.இளஞ்செழியன் தலைமையில் அரிசி மற்றும் மளிகைப் பொருள்களை வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட செஞ்சிலுவை சங்கத் தலைவா் கு.சரவணன் முன்னிலை வகித்தாா்.

சமூகப் பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியா் தாரகேஸ்வரி இப்பொருள்களை வழங்கினாா். இதில் மண்டல துணை வட்டாட்சியா் மகாலட்சுமி, வருவாய் ஆய்வாளா் சுரேஷ், கிராம நிா்வாக அலுவலா் ஞானவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதனிடையே, திமிரி நரிக்குறவா் காலனியில் 20 குடும்பத்தினருக்கு இந்து முன்னணி சாா்பில் அமைப்பின் மாவட்டச் செயலாளா் ராஜ்குமாா் தலைமையில் திமிரி ஒன்றியத் தலைவா் இளங்கோ, பொறுப்பாளா் கிருஷ்ணசாமி ஆகியோா் முன்னிலையில் நிவாரண உதவிகளும் திமிரி வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீரும் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT