ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று: பாதிப்பு எண்ணிக்கை 66-ஆக உயா்வு

10th May 2020 10:08 PM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 6 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டை அடுத்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 66-ஆக உயா்ந்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 60 பேரில் 39 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 21 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்நிலையில் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 1 பெண் உள்பட 6 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 66-ஆக உயா்ந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT