ராணிப்பேட்டை

மதுக்கடைக்கு எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

9th May 2020 06:00 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே மேல்புதுப்பாக்கத்தில் அரசு மதுக்கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினாா்கள்.

பிற இடங்களில் இருந்து மது வாங்க அதிக அளவில் ஆட்கள் மேல் புதுப்பாக்கத்துக்கு ஆள்கள் வருவதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கடைக்கு முன்பாக காவல்துறை அமைத்த தடுப்பு வேலிகளையும், பந்தல்களையும் சூறையாடினா். இதனால் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ராணிப்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளா் கீதா பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து கடை மூடப்பட்டது. பொதுமக்கள் கலைந்து சென்ற பின்பு மீண்டும் கடை திறக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் மீண்டும் போராட்டம் நடத்தினா். மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளிடம் மனு கொடுத்த பின் மதுக்கடை மூடப்பட்டது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT