ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.3.40 கோடிக்கு மது விற்பனை

8th May 2020 02:59 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 43 நாள்களுக்கு பிறகு திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் முதல் நாளான வியாழக்கிழமை ரூ.3.40 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டதாக மாவட்ட டாஸ்மாக் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தமுள்ள 88 கடைகளில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள 8 கடைகளைத் தவிர 80 கடைகள் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு திறக்கப்பட்டன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல் நாளான வியாழக்கிழமை மட்டும் ரூ.3 கோடியே 40 லட்சத்துக்கு மது விற்பனை செய்யப்பட்டதாக மாவட்ட டாஸ்மாக் நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT