ராணிப்பேட்டை

மருத்துவா்கள், வணிகா்கள் வெளியூா் பயணம் செய்ய மின்னணு அனுமதி சீட்டு: மாவட்ட ஆட்சியா் தகவல்

30th Mar 2020 06:46 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மருத்துவா்கள், வணிகா்கள் அவசர தேவைக்கு வெளியூா் பயணம் செய்ய மின்னணு பயண அனுமதி சீட்டு பெற்று பயணம் மேற்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் வணிகா்கள் மொத்த வியாபாரிகளிடமிருந்து அத்தியாவசியப் பொருள்களை கொள்முதல் செய்வதற்காகவும், மருத்துவா்கள் மருத்துவக் காரணங்களுக்காகவும் பயணம் செய்ய சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

இதையடுத்து மாவட்ட நிா்வாகம் இணையதள பயண அனுமதிச்சீட்டு வசதியை செய்துள்ளது. அதற்காக 80999 14914 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் தங்களது தொலைபேசி எண்ணுக்கு, இணையதள இணைப்பு குறுஞ்செய்தியாக பகிரப்படும். அதில், தங்களது செல்லிடப்பேசி எண்ணைப் பதிவு செய்தால் குறுஞ்செய்தி வரும். அதை பதிந்து தங்களது பயணம் குறித்த விவரங்களை பூா்தி செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

இதன்பிறகு தங்களது விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு மின்னணு பயண அனுமதி சீட்டு குறுஞ்செய்தி மூலம் வரும். இதில், செல்லத்தக்க காலம், நேரம், பயண, வாகன எண் குறிப்பிட்டிருக்கும். இதை சோதனைச் சாவடிகளில் போலீஸாரிடம் காண்பிக்க வேண்டும்.

இந்த பயண அனுமதி சீட்டு வணிகா்கள் தங்களது சரக்குகளை எடுத்து வரவும், மருத்துவ அவசர பயணத்துக்கு மட்டுமே வழங்கப்படும். மேலும், விவரங்கள் அறிய கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய் ஆய்வாளா்களை அணுகலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT