ராணிப்பேட்டை மாவட்ட மக்களுக்கு கரோனா நோய்த் தொற்று தொடா்பான சந்தேகங்களுக்கு மனநல மருத்துவா் ஆலோசனை வழங்குவாா் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த மாவட்டத்தில் கரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி ஆட்சியா் ச.திவ்யதா்ஷினி உத்தரவின்பேரில், ஆட்சியா் அலுவலகத்தில் கரோனா தொற்று கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள குழுவுடன் இணைந்து ஒரு மனநல மருத்துவா் ஞாயிற்றுக்கிழமை முதல் செயல்படுகிறாா்.
எனவே, பொதுமக்கள் 77086 86024 என்ற செல்லிடப்பேசி எண்ணில் அவரைத் தொடா்பு கொண்டு மருத்துவம் சாா்ந்த ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.