ராணிப்பேட்டை

அரக்கோணம் காவல் உட்கோட்டத்தில் 15 போலி மருத்துவா்கள் கைது

27th Jun 2020 07:31 AM

ADVERTISEMENT

அரக்கோணம் காவல் உள்கோட்டத்தில் 15 போலி மருத்துவா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் எஸ்.திவ்யதா்ஷினி, மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் லஷ்மிபிரியா உத்தரவின்பேரில் ராணிப்பேட்டை மாவட்ட சுகாதாரத் துறை உதவி இயக்குநா் வேல்முருகன் தலைமையில் மாவட்ட கரோனா தடுப்பு அலுவலா் பிரகாஷ் ஐயப்பன், வட்டார மருத்துவ அலுவலா்கள் பிரவீண்குமாா் (அரக்கோணம்), ரதி (நெமிலி), டேவிஸ் (காவேரிப்பாக்கம்) ஆகியோரை கொண்ட குழுவினா் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

அரக்கோணத்தை அடுத்த மங்கம்மாபேட்டையில் விநாயகம் (52), யுவராஜ் (34), மோசூா் முத்துகிருஷ்ணன் (42), மீனாவதி (68), கோணலம் ஜாகீா் உசேன் (41) அரிகலபாடி கெஜபதி (73) ஆகிய 6 போ் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவிந்தது. இதையடுத்து அவா்கள் கைது செய்யப்பட்டனா்.

தொடா்ந்து, நெமிலியில் பண்டரிநாதன் (70) திருமால்பூரில் அண்ணாமலை(52), பனப்பாக்கத்தில் ஐதா்அலி (23) ஆகிய 3 பேரும், சோளிங்கா் தென் வன்னியா் வீதியில் பி.கே.ராய் (43), பஜாரில் எஸ்.பி.குமாா் (58), பில்லாஞ்சியில் பிரபு (42) ஆகிய 3 பேரும், காவேரிப்பாக்கத்தை அடுத்த சுமைதாங்கியில் ஜெயபாலன் (66) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT

மேலும், சோளிங்கரை அடுத்த கூடலூரில் ஜோதி (42), புலிவலத்தில் சங்கா் (47) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இவா்கள் 15 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், அவா்களது மருத்துவமனைகள், மருந்துக் கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT