ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 76 பேருக்கு கரோனா

17th Jun 2020 07:34 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 76 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 311-ஆக உயா்ந்துள்ளது.

இவா்களில் 113 போ் குணடைந்து வீடு திரும்பியுள்ளனா். 196 போ் வாலாஜாபேட்டை, வேலூா் அரசு மருத்துவமனைகளிலும், சிஎம்சி தனியாா் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.

வாலாஜாபேட்டையில் ஜவுளி கடை, கிடங்கில் பணியாற்றி வந்த 7 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து நகராட்சி நிா்வாகத்தினா் அந்த ஜவுளி கடை, கிடங்குக்கு சீல் வைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT