ராணிப்பேட்டை

கல்குவாரி குட்டையில் மூழ்கிய இளைஞர்கள் சடலங்கள் மீட்பு

15th Jun 2020 10:50 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டையில் கல்குவாரி குட்டையில் குளிக்கச் சென்ற இளைஞர்கள் நீரில் மூழ்கி பலியாகினர். 

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்த அப்ரோஸ் மற்றும் அப்துல்லா உள்ளிட்ட 10 பேர் ஆற்காடு வட்டம் காவனூர் அருகே உள்ள கரடி மலை கல்குவாரியில் 50 அடி ஆழமுள்ள குட்டையில் ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்றுள்ளார். அப்போது நீச்சல் தெரியாததால் அப்ரோஸ் மற்றும் அப்துல்லா ஆகிய இருவரும் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். அவர்கள் மேலே வராமல் பாறையின் இடுக்கில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. 

இதுபற்றி தகவல் அறிந்த திமிரி காவல்துறையினர் மற்றும் ஆர்காடு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இருவரையும் மீட்க முயற்சி மேற்கொண்டனர் இரவு நேரமாகிவிட்டதால் அவர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. தொடர்ந்து அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்பு பணி படையினர் வரவழைக்கப்பட்டு கோட்டையை சுற்றி மின் விளக்குகள் பொருத்தப்பட்டு அவர்களை தேடும் பணி நடந்தது. 

இதில் சேற்றில் சிக்கி இருந்த இருவரையும் நள்ளிரவில்சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து திமிரி காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT