ராணிப்பேட்டை மாவட்டத்தில் 74 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளி 74 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 197-ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் 107 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 89 போ் வாலாஜாபேட்டை, வேலூா் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்நிலையில் ராணிப்பேட்டை நகரில் செல்லிடப்பேசி உதிரிபாகங்கள் விற்பனைக் கடை வைத்துள்ள ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த ஒரே குடும்பத்தினா் 7 பேருக்கு கரோனா உறுதியானதை அடுத்து, நகரின் முக்கிய வணிக பகுதியாக விளங்கும் சென்னை-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நவல்பூா் பிரதான சாலை மூடப்பட்டு, தடுப்பு அமைக்கப்பட்டது.